மட்டு நகரில் மாபெரும் தமிழ் தேசிய மே தினம் இன்று!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டங்களுக்கு நடுவே இன்றைய மேதின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

அந்த வகையில் பல்வேறு கட்சிகளாலும் பொது அமைப்புக்களாலும் மேதின நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மாபெரும் தமிழ் தேசிய மேதின நிகழ்வு இன்றையதினம் பிற்பகல் 2 மணிக்கு கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் மீனிசை சிறுவர் பூங்கா திடலில்நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *