எச்.ஐ.வி. தொற்றிய பெரும்பாலானோருக்கு கொ​ரோனா தடுப்பூசி

எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளனர் என பாலியல் நோய் தடுப்புக்கான விசேட வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட தெரிவித்துள்ளார்.

எச்ஐ.வி நோயாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுமாயின், சிக்கலான நிலை ஏற்படக்கூடுமென அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, எச்.ஐ.வி /எயிட்ஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தங்களின் பகுதிகளில் தடுப்பூசி ஏற்றப்படும் நிலையங்களுக்கு சென்று, தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தங்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதற்கு முன்னர், மருத்துவ ஆலோசனைகளை இவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அஜித் கரவிட்ட வலியுறுத்தினார். எவ்வாறாயினும், கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுவதால் பாலியல்சார் தொற்றுநோய்க்கு உள்ளாகியவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என்றார்.

கொரோனா நோயாளர்களுக்கு வீடுகளில் சிகிச்சை வழங்கும் திட்டத்தினூடாக எவ்வித அறிவிப்புகளும் இன்றி, வீடுகளில் சிகிச்சை பெறும் நோயாளர்கள் அபாய நிலையை எதிர்நோக்கக்கூடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

60 வயதுற்கும் குறைந்த, ஏனைய நோய்களால் பாதிக்கப்படாத, கொரோனா தொற்றுக்கான சாதாரண அறிகுறிகளுடன் உள்ளவர்கள் மாத்திரமே சுகாதார அதிகாரிகள், வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ் வீடுகளில் சிகிச்சை பெற முடியும் என்றார்.

ஏனைய கொரோனா நோயாளர்கள் மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொண்டு, வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவது கட்டாயமானது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *