காட்டு யானைகள் நாட்டில் நடமாடுவதை தடுப்பதற்கு சிறந்த தீர்வு குட்டி யானைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது அல்லது அவற்றை விகாரைகள், கோவில்களில் வளர்ப்பது நல்லது என ஸ்ரீலங்கா மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் அகிலா எல்லவால தெரிவித்துள்ளார்.
அதற்கான நிதி திறன் உள்ளவர்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடலாம் எனவும் இந்த நாட்டின் வரலாறு முழுவதும் இதுதான் நடந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
யானைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.