இன்றைய மின்சாரம் தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

கொழும்பு,மே 01

இன்று நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மேதினம் காரணமாக மின்சாரத்தை துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் திங்கட்கிழமை மற்றும் எதிர்வரும் 4ஆம் திகதி ஆகிய தினங்களில், A முதல் W வரையான வலயங்களில் மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வலயங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் ஒரு மணிநேரமும் 20 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *