உயிரிழந்தவர்களை நினைவுகூர்வது என்பது எமது அடிப்படை உரிமை. அதிலும் அஹிம்சை வழியில் எமது இன விடுதலைக்காக உண்ணாநோன்பு இருந்து ஆகுதியாகிய தியாகி திலீபனை நினைவுகூராமல் தடுப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் தினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்த வந்த கஜேந்திரன் கைது செய்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், “தியாக தீபம் திலீபனை நினைவுகூர்ந்தமைக்காகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்” என்றும் அவர் கூறினார்.