திருகோணமலையில் அண்மைக் காலமாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வழங்கப்படும் குடி நீர் விநியோகம் தடைப்பட்டதால் பல கிராம மக்கள் குடிநீரை பெற்றுக் கெள்வதில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதுதொடர்பில், கருமலையூற்று கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எல்.எம். நௌபரின் முயற்சியின் மூலம் பிரதேச சபையின் பங்களிப்புடனும் பவுசர் மூலம் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது நன்றியை உப தவிசாளர் தெரிவித்துள்ளார்.