பிரதமர் பதவி தொடர்பாக ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தை ஏற்க தயார் – மஹிந்த

<!–

பிரதமர் பதவி தொடர்பாக ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தை ஏற்க தயார் – மஹிந்த – Athavan News

பிரதமர் பதவி தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தமிழ் ஊடகமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள செய்தியில் பிரதமர் தனது நிலைப்பாட்டை இன்று காலை ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இராஜினாமா செய்யுமாறு கோரிய மகாநாயக்க தேரர்களின் பிரேரணையை உடனடியாக அமுல்படுத்துமாறு பௌத்த தேரர்கள் குழு நேற்று ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது.

இந்த நிலையிலேயே பிரதமர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *