தனியார் பஸ் சேவைகள் இன்றைய தினம் மட்டுப்பாடு

கொழும்பு, மே 01

நாடு முழுவதும் இன்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்டளவு பஸ்களே சேவையில் ஈடுபடும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடு பூராகவும் 60 சதவீதமான பஸ்கள் இன்றைய தினம் சேவையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய வார இறுதி விடுமுறைக்கு அமைவாக இ.போ.ச பஸ்கள் வழமைப் போல் சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளர் பண்டுக சுவர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *