நாட்டுக்காக பல விளையாட்டுக்களில் வென்று பதக்கங்களை பெற்றுக்கொடுத்தும் எந்தப் பிரியோசனமும் இல்லை! – வீராங்கனை கவலை (வீடியோ இணப்பு)

நாட்டுக்காக விளையாட்டில் பல பதக்கங்களை பெற்றுக்கொடுத்தும் எந்தப் பிரியோசனமும் இல்லையென மன்னாரைச் சேர்ந்த அண்டனி திவ்வியா என்ற வீராங்கனை கவலை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கையில்:

நான் எத்தனையோ விளையாட்டு போட்டிகளுக்குச் சென்று கிண்ணங்கள், பதக்கங்களை வென்றுள்ளேன். இலங்கைக்கு, இதுவரைக்கும் நடந்த எல்லாப் போட்டிகளிலும் ரோல் போல் சம்பந்தப்பட்ட எல்லா போட்டிகளில் நான் பங்குபற்றினேன்.

ஆனால் இதுவரைக்கும் மன்னார் மாவட்டத்தில் என்னை தேடி வந்து எந்தவொரு மீடியாக்களும், இவ்வாறான திறமை இருக்கின்றது என வெளிக்கொணரவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்திற்கு, இன்று பாடநெறியை கற்கவந்த நிலையில் என் நண்பியூடாக சமூகம் மீடியாவில் என் திறமை வெளிக்கொணரப்படுகின்றது.

எல்லாப் பெண்களுக்கும் நான் ஒன்று சொல்ல விரும்புகின்றேன். எந்த ஒரு பிரச்சனையையும், யார் வந்து தடுத்தாலும், உங்களால் முடியும் என்ற நம்பிக்கையுடன் தொடங்கி, அது முடியும் வரை நீங்கள் செய்யுங்கள்.

அத்தோடு மே தின வாழ்த்துக்களும் தெரிவித்து, என் திறமையை வெளிக்கொணர்ந்த சமூகம் மீடியாவிற்கு நன்றியும் கூறியுள்ளார்.

https://www.facebook.com/SamugamLk/videos/1000854897283197

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *