சர்வதேச தொழிலாளர் தினமான இன்று திருகோணமலை பிரதான பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதனை திருகோணமலை சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது, அரசாங்கத்து எதிரான சுலோகங்களை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை உடனடியாக வெளியேறு, நிலைமையை உடனடியாக சரியான நிலைமைக்கு நிறுவுங்கள், அத்தியவசிய பொருட்களின் விலைகளை உடனடியாக குறைக்கவும், தோல்வியடைந்த அரசாங்கமே உடனடியாக வெளியேறு உள்ளிட்ட வாசகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




