திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு உழவு இயந்திரங்களுடன் நான்கு சந்தேக நபர்களை நேற்று(23)மாலை கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் மற்றும் அக்போபுர பகுதியைச் சேர்ந்த 23,27,33,மற்றும் 30 வயதுடைய நால்வரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்போபுர சீனி அலை நான்காவது வலயத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட போது விசேட பொலிஸ் அதிரடைப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சூரியபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினாரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்றில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.