கொக்குவில் கடைக்கு பெற்றோல் குண்டு வீசிய சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணம்- கொக்குவில், குளப்பிட்டி சந்தியிலுள்ள வர்த்தக நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து வாள் ஒன்றும் வன்முறை சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) இரவு குளப்பிட்டி சந்தியிலுள்ள புடவை கடை ஒன்றுக்கு, இனந்தெரியாத சில சந்தேகநபர்களினால் பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல் மூலம் தீ மூட்டப்பட்டது.

இதில் கடையில் இருந்த புடவைகள் மற்றும் நேற்று கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புடவைகள் உட்பட பல இலட்சம் ரூபாய் சொத்து தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

மேலும் தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார், மேலதிக விசாரணையை முன்னெடுத்திருந்த நிலையில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply