
நற்சான்றிதழ்களை கையளித்த மிலிந்த!
அமைச்சரவை அந்தஸ்த்துடன் நியமிக்கப்பட்ட இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரக்கொட நேற்றுமுன்தினம் புதுடில்லியில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தனது நற்சான்றிதழ்களைக் கையளித்தார்.
கொரோனாத் தொற்றுநோய் சூழ்நிலையில் நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப, நற்சான்றிதழைக் கையளிக்கும் வைபவம் வெளிவிவகார அமைச்சில் மெய்நிகர் ரீதியாக இடம்பெற்றது. ராஷ்ட்ரபதி பவனில் இருந்து வெளியுறவு அமைச்சுடன் இணைந்து கொண்ட இந்திய ஜனாதிபதியிடம் மொரக்கொட தனது நற்சான்றிதழைக் கையளித்தார்.
இந்தியாவுக்கான இலங்கையின் இருபத்தி ஆறாவது தூதுவராக மிலிந்த மொரக்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.