
வீடுகளில் சிகிச்சை முறைமை வெற்றி!
கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வீடுகளில் சிகிச்சை அளிக்கும் முறைமை வெற்றியளித்துள்ளது. இதனால் இந்த வாரம் வீடுகளில் சிகிச்சை பெற்ற எவரும் உயிரிழக்கவில்லை என்று சுகாதார மேம்பாட்டு அலுவலகப் பணிப்பாளர், விசேட மருத்துவ நிபுணர் ரஞ்சித் பட்டுவண்துடாவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் ஒட்சிசன், மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் கொரோனாத் தொற்றாளர்களுக்குப் போதுமானதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




