புனித ரமழான் பண்டிகை நாளை மறுதினம்!

இலங்கையில், புனித சவ்வால் மாதத்திற்கான தலைபிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது.

புனித சவ்வால் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு சற்றுமுன்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பிறை தென்பட்டமைக்கான ஆதாரம் கிடைக்கப்பெறவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்தது.

இதற்கமைய, இஸ்லாமியர்கள் நாளைய தினமும் நோன்பு நோற்பதுடன், நாளை மறுநாள் புனித ரமழான் பண்டிகையை கொண்டாடவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *