வடக்கு கிழக்கில் ஏன் இராணுவத்தை குவித்து வைத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு இன்றுவரை பதில்லை என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
உலகத் தொழிலாளர் தின பொதுக் கூட்டமானது இன்றைய தினம் மாலை 3.00 மணியளவில், நல்லூர் இளங்களைஞர் மன்றத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அக்கறையோடு திகழ்வதன் மூலம் நமது தொழிலை தக்க வைத்துக் கொள்ளலாம். இலங்கை மாத்திரம் அல்ல. ஒட்டுமொத்த உலகமுமே கொரோனா காலத்தில் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. ஆனால் அவைகள் மீண்டுள்ளன.
கொரோனா காரணமாக பொருளாதார நெருக்கடி நிலவியது என ஆணித்தரமான கருத்து இல்லை. ராஜபக்ஸ சகோதரர்கள் கொள்ளை அடித்த பணம், வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டதினால் நாடு பொருளாதாரத்தில் படு கீழே சென்று கொண்டிருக்கிறது என்ற கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது.
ராஜபக்ஸ சகோதரர்கள் கொள்ளை அடித்தார்களா? இல்லையா? என்பது வேறு விடயம். ஆனால் இந்த நாட்டின் சரிவுக்கு கொரோனாவுடன் சேர்ந்து, சுற்றுலா பயணிகளின் வீழ்ச்சி, தேயிலை, ஆடைகளுக்கான ஏற்றுமதிக்கு அப்பால், யுத்தத்திற்கு செலவிட்ட பணம், ஆயுதம் ஆயுதமாக கடன் கொடுத்து வாங்கிய பணம் என பல விடயங்கள் உள்ளது.
யுத்த காலத்தில் இராணுவத்துக்கு ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டை பார்க்க இப்பொழுதும் அதைவிட அதிகமான நிதியை அல்லவா ஒதுக்குகிறீர்கள். இதைப் பற்றி அங்கே யாரும் கேட்டதாக இல்லை. எதற்காக வடக்கில் ராணுவத்தை நிறுத்தினீர்கள்? எதற்காக இவ்வளவு நிதியை ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள்? இந்த கேள்விகளை யாரும் உயர்த்தி எழுப்புவதாக இல்லை. ராஜபக்ஸ சகோதரர்கள் அடித்த கொள்ளை பணம் பற்றி தான் பேசுகின்றார்கள் பொருளாதார சரிவுக்கு அதுதான் காரணம் என்கிறார்கள்.- என்றார்.




