தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை தொலைபேசியில் வைத்திருந்த இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம், மானிப்பாயில் நேற்று இரவு நடைபெற்றுள்ளது.
இந்நபர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் கடமையாற்றுபவர் என்றும் தெரியவருகின்றது.
மேலும், இவரை விசேட அதிரடிப்படையினர், மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.