மதுக்கடைகளை திறப்பதற்கு அறிவுறுத்தல்கள் வழங்க யாரும் இல்லையென்றால், தான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது மதுக்கடைகளைத் திறப்பது குற்றமல்ல என்றும் நாடு மூடியிருந்தாலோ, இல்லை என்றாலோ, பணம் உள்ளவர்கள் மதுபானங்களை குடிக்கத்தான் செய்கின்றார்கள்.
ஆகவே, மது அருந்துவதை சட்டத்தால் தடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதுக்கடைகளை திறக்கும்போது விரும்புவோர் வாங்கலாம், பிடிக்காதவர்கள் வாங்காமல் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்





