விமானத்தில் மறைத்து வைத்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 472 கிலோ மஞ்சள் தொகையை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கிட்டத்தட்ட 4 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில், 472 கிலோகிராம் மஞ்சள், 352 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் சில மருந்துப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தியாவின் சென்னை இருந்து வந்த பயணிகள் குழுவின் மூலமாகவே இத்தகைய பொருட்கள் மறைத்து நாட்டிற்கு கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த பயணிகள் இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற இலங்கையர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக படகுகள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட அதிக அளவு மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கடத்தல்காரர்கள் விமானம் மூலம் மஞ்சள் கடத்த முயன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.