இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டதை இரத்துச் செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில், ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுக்களை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன், அஜித் கப்ராலின் நியமனத்தை நிறுத்தி வைக்கக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





