
கல்முனையில் வாள்வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கல்முனை – மதரஸா வீதியில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த 19 வயது இளைஞர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தனது வீட்டின் முன்பாக வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர்களை தடுத்த இளைஞருடன் வேறு சில இளைஞர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றவர்கள் மீண்டும் வாள்களை எடுத்து வந்து இளைஞரை தாக்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணையை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.