கொரோனாத் தொற்று ஏற்பட்ட நிலையில், காலி கராப்பிடிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் மருத்துவர் உயிரிழந்தார்.
இரத்மலானை தேசிய வைத்தியசாலையில் பணியாற்றும் 31 வயதுடைய தரிந்தி தில்ஷிகா விதானகே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரத்மலானை வைத்தியசாலையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, நிமோனியா நோயால் பல உறுப்புக்களின் செயலிழப்பு காரணமாக ஓகஸ்ட் 23 அன்று கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் எக்மோ இயந்திரத்தின் உதவியுடன் சிகிச்சை வழங்குவதற்காக செப்டம்பர் 02 ஆம் திகதி மருத்துவர் கராப்பிட்டிய வைத்தியாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 22 ஆம் திகதி பிற்பகல் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.