தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய மேலும் 152 பேர் கைது!

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறும் வகையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் 51 ஆயிரத்து 733 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 7,000 பேர் மீது வழக்குத் தொடரப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *