நினைவேந்தலுக்கு யாழ்.நீதிமன்று தடை!

நினைவேந்தலுக்கு யாழ்.நீதிமன்று தடை!

தியா­க­தீ­பம் திலீ­ப­னின் நினை­வேந்­தல் நிகழ்வை நடத்­து­வ­தற்கு யாழ்ப்­பாண நீதி­வான் மன்று தடை உத்­த­ரவு வழங்­கி க் கட்­ட­ளை­யிட்­டுள்­ளது.
நல்­லூ­ரில் அமைந்­துள்ள தியா­க­தீ­பம் திலீ­ப­னின் நினை­வி­டத்­தில், எதிர்­வ­ரும் 26ஆம் திக­திவரை நடத்த ஏற்­பா­டா­கி­யுள்ள 34ஆவது ஆண்டு நினை­வேந்­தல் நிகழ்­வுக்கு தடை விதித்து உத்­த­ர­வி­டு­மாறு யாழ்ப்­பா­ணம் தலை­மைப் பொலி­ஸார், நீதி­மன்­றில் நேற்று விண்­ணப்­பம் செய்­த­னர்.

இலங்­கை­யி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் தடை செய்­யப்­பட்ட தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் உறுப்­பி­ன­ரான திலீ­பனை, நினை­வு­கூ­ரும் நிகழ்வு நடத்­தத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தாக தக­வல் கிடைத்­துள்­ளது. அத்­து­டன், நாட்­டில் நில­வும் கொரோனா பர­வல் கார­ண­மாக நடை­மு­றை­யி­லுள்ள தனி­மைப்­ப­டுத்­தல் சட்­டத்­துக்கு அமைய நிகழ்­வு­களை நடத்த முடி­யாது. எனவே, திலீ­ப­னின் நினை­வேந்­தல் நிகழ்­வுக்­குத் தடை விதிக்­க­வேண்­டும் என்று பொலி­ஸார் மன்­றில் விண்­ணப்­பம் செய்­த­னர்.

அந்த விண்­ணப்­பத்தை ஏற்று, நீதி­மன்று நினை­வேந்­த­லுக்­குத் தடை விதித்­தது. எனி­னும் தடைக் கட்­ட­ளை­யில் எவ­ரு­டைய பெய­ரும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *