இந்தியாவில் உள்ளூர் அளவிலேயே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

இந்தியாவில் உள்ளூர் அளவிலேயே கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருவதாகவும், இதனைக் கொரோனா தொற்றின் 4 ஆம் அலையின் தொடக்கமாகக் கருத முடியாது எனவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கூடுதல் இயக்குனர் சமிரன், சில பகுதிகளில் தொற்று பாதிப்பு உறுதியாகும் விகிதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.

பரிசோதனை குறைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சில மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும்,  நாடு முழுவதும் சீராக பரவவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 3 ஆயிரத்து 314 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *