
நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மாத்தளை முன்னாள் மேயரின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற இப்தார் நிகழ்வின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் பிரதமர் நிதி அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசர் காசிம், பைசர் முஸ்தபா, எம்.ஹாரிஷ், அமீர் அலி, எஸ்.எம்.மரிக்கார், சுசில் பிரேமஜயந்த ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

