திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, முருகன் கோயில் வீதியில் வைத்து இன்று (24) அதிகாலை 1050 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
திருகோணமலை பாலைஊற்றை சேர்ந்த 44 வயதான ஆட்டோ சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபரை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து இருப்பதாகவும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.