குளியாப்பிட்டிய சம்பவம்; 14 வயது சிறுவன் உட்பட மூவர் கைது

குளியாப்பிட்டிய – மாதம்பே வீதியின் கனதுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவன் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த விபத்தை அடுத்து குறித்த பகுதியில் இருந்த மக்கள் டிஃபெண்டர் ரக வாகனத்துக்கு தீ வைத்துள்ளனர்.

குளியாப்பிட்டிய – மாதம்பே வீதியின் கனதுல்ல பகுதியில் உந்துருளி ஒன்றும் டிஃபெண்டர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளியை செலுத்திய நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *