யாழில் பல கோயில்கள் பூஜை வழிபாடு இல்லாமல் ,முடக்கப்பட்டுள்ளது என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ் சொற் சொல்வர் ஆறுதிருமுருகன் ,பா.ஜ.க மாநிலங்களின் தலைவருக்கு எடுத்துக்கூறியுள்ளார்.
தமிழ் நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களின் தலைவர் அண்ணாமலை குப்புசாமி இன்று காலை
நல்லுயிர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து நல்லூர் ஆதீன முதல்வரை சந்தித்தும் கலந்துரையாடியுள்ளார். இதன்போதே அவருக்கு இவ்வாறு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
ஆறுதிருமுருகன் மேலும் தெரிவிக்கையில்:
நாம் கட்சி அரசியலில் இல்லை.சமூகம் சமயம் என்று மட்டுமே இங்கே வாழ்கின்றோம்.ஆனால் இங்கே மக்கள் படும் துன்பங்கள் சொல்லில் அடங்காதவத்தை. யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் பல கோயில்கள் பூஜை இல்லாமல் உள்ளது. அங்கே செல்லவும் முடியாது.
ஜனாதிபதி இங்கே வருகை தந்தால் தங்குவதற்காக ஒரு மாளிகை ஒன்றை கட்டியுள்ளார் . அதற்கு அண்மையில் உள்ள குடும்பங்கள் எல்லாம் வெளியேற்றப்பட்டுள்ளன. இதனால் பல மடங்கள் ,கோயில்கள் கைவிடப்பட்டுள்ளது.
அந்தச் சாபங்கள் தான் நாட்டை படாத பாடு படுத்துகிறது. ஆலயங்களில் மணி ஓசை கேட்கும் வரையில் நாடு உருப்படாது. இங்கே இருந்து யார் தமிழகம் வந்தாலும் முகாம் கொடுத்து, உணவு கொடுக்கிறீர்கள் அதற்கு நன்றி.
நாம் பல மக்களை இழந்து விட்டோம்.நீங்கள் பிரதமரோடு நல்ல உறவை பேணுகிறீர்கள். இப்போது நீங்கள் நினைத்தால் இந்த சந்தர்பங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும். இப்போது இல்லையென்றால் எப்போதும் தீர்க்க முடியாது – என்றார்.



