வடமராட்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து! – இருவர் காயம்

வடமராட்சி மாடுசந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்றைய தினம் ஓர் விபத்து இடம்பெற்ற நிலையில், அது தொடர்பான விபரங்களை சேகரிக்க போலீசார் குறித்த பகுதியில் நின்றிருந்துள்ளனர்.

இந்த நிலையில், தலைக்கவசம் அணியாது வந்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்டு, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் நின்றிருந்த நெல்லியடி பொலிஸார் மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *