இலங்கை நாட்டின் அரசியல் பிரமுகர்களின் படங்களுடன் பிரான்ஸ் நாட்டில் போராட்டம்

பிரான்ஸ் நாட்டில் மே தின மக்கள் எழுச்சி போராட்டம் ஒன்று நேற்றையதினம் மாலை இடம்பெற்றுள்ளது.

தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பிரான்ஸ் நாட்டின் RepubLique வில் நேற்றையதினம் (01) மாலை 03 மணியளவில் குறித்த மே தினத்தில் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

முன்னெடுக்கப்பட்ட குறித்த மே தின போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இலங்கை மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கான நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோசங்களுடன் இலங்கை அரசியல் பிரமுகர்களின் படங்களை பதாதைகளாக தாங்கி அவர்களை நாங்கள் கண்டிக்கின்றோம் என்ற வாசங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *