“Gota Go Home10 எழுத்து மந்திரம்
அனைத்துக்கும் பொறுப்பேற்று
பதவி விலகுவதுதான்
அரசியல் அறம்
Gota Go Home – சகல மக்களும் உச்சரிக்கும் 10 எழுத்து மந்திரம் இது. சுமார் 2 கோடி மக்களின் ஏகோபித்த இந்த கோஷம்,இன்னும் பலித்ததாக தெரியவில்லை. பலிக்குமா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
69 இலட்சம் வாக்குகளால் தேர்வு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிதான் கோட்டாபய ராஜபக்ஷ . இலங்கை வரலாற்றில் அதிகூடிய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற பெருமை இவருக்கு மட்டும் தான் இருக்கிறது.
அதே 69 இலட்சம் மக்களோடு நாடே திரண்டு ‘
கோட்டா கோ ஹோம் ‘என கோஷங்கள் எழுப்புகின்ற போது, முரண்டு பிடிக்கும் அரசியல் கோமாளியும் இவர்தான்.
நல்லாட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஜனநாயகத்தை பாதுகாக்க களமிறங்கிய நாயகன் தான் இந்த கோட்டா.
30 ஆண்டு கால யுத்தத்தை முடித்தார். மாற்றுக்கருத்தில்லை. சிங்கள மக்களின் ஏக தலைவன் என்ற நிலைக்கு இடம்பிடித்தார். பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று அழித்தார். யுத்த முனையில் சரணடைந்தவர்கள் எல்லாம் காணாமல் போனார்கள்.
யுத்தத்தில் நொந்து சிதைந்து சின்னாபின்னமாகி போன தமிழர்களின் கண்ணீரும் கம்பலைக்கும் மத்தியிலும், தென்னிலங்கை மக்களின் ஒப்பற்ற நாயகனாக தான் இவர் திகழ்ந்தார்.
தமிழர்கள் பேராபத்தில் குற்றுயிராக முக்கி முனகிக் கொண்டிருந்த போது, பால் சோறும்,இனிப்பும்,மகிழ்ச்சி ஊர்வலங்களும் நடத்தி தென்பகுதி மகிழ்ச்சியின் உச்சத்தில் சஞ்சரித்தது. அந்த வேளையிலும் கோட்டாபய ராஜபக்ஷதான் அவர்களின் ஒப்பற்ற நாயகன்.ஆனால்,அதே தலைவனைத் தான் இன்று அதே மக்கள் வீட்டுக்கு போனாl போதும் என்று ஆவேசமாக கோஷம் எழுப்புகின்றனர். மிரிகானையில் அவரது வீட்டுக்குச் சென்ற மக்கள் ஜனாதிபதியை வீ ட்டை விட்டு கூக்குரலிட்டனர் வெளியே வருமாறு அவரது விரிவான வீட்டுக்குச் சென்று வெளியே வருமாறு கூக்குரலிட்டனர். அதேநேரம் நாடு முழுவதும் எதிரான போராட்டங்களும் கோஷங்களும் நடத்தப்பட்டு கொண்டே இருக்கிறது.
முடியாத நிலையில் முற்றுகைப் போராட்டங்களும் நடத்துகின்றனர். இப்போது, ஜனாதிபதி செயலகம் முற்றுகைக்குள் இருக்கிறது. செயலகத்துக்கு செல்லமுடியாது தடுக்கப்பட்ட ஒரே ஒரு ஜனாதிபதி இவராகத்தான் இருக்க முடியும்.
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமும் மாணவர்களால் சுற்றி வளைக்கப்பட்டது. அந்தக்திலும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வீட்டினுள் இருக்கவில்லை என்பதே பிந்திக் கிடைத்த தகவலாகவும் இருக்கிறது.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து இருக்கின்றன. என்றாலும், இருவரும் பதவிகளில் இருந்தும் ஆசனங்களில் இருந்தும் அசைவதாக தெரியவில்லை.
தன்னை அசைக்க முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருக்கிறார். “நான் பதவி விலகமாட்டேன் என்னை யாரும் பதவி விலக்கவும் முடியாது ” என்று அண்ணன் மஹிந்த ராஜபக்ஷ …….. அடம்பிடிக்கிறார்.
நெருக்கடிகளுக்கும் அழிவுகளுக்கும் பொறுப்பேற்று பதவி விலகிக் கொள்வது தான் தார்மீகம் மட்டுமல்ல,ஆட்சியின்
அறமாகவும் இருக்கும். நாடு சீரழிந்து விட்டது. இனிமேலும், இழப்பதற்கு எதுவுமே இல்லை.இந்த நிலையிலும் தார்மீக பொறுப்பேற்று விலகிச் செல்வதுதான் மக்களையும் ஜனநாயகத்தையும் மதிக்கும் மாண்பாக இருக்கும்.
அறுபத்தி ஒன்பது இலட்சம் என்ற மாயை இலக்கத்துக்குள்ளிருந்து ஜனாதிபதி கோட்டாபய இன்னும் மீளவில்லை. “அறுபத்தி ஒன்பது இலட்சம் மக்கள் என்னை நம்பி வாக்களித்திருக்கிறார்கள்.என்னுடைய பதவிக்காலம் வரை அவர்களுக்காக பணியாற்றி விட்டு தான் ஓய்வு பெறுவேன் “என்று ஜனாதிபதி கூறியிருக்கிறார். யதார்த்தத்தை இவர் இன்னும் புரிந்து கொண்டதாக இல்லை.
இவருக்கு வாக்களித்த மக்களே அவருக்கு எதிராக திரும்பியிருக்கிறார்கள். மதவாத, இனவாத உணர்வினால் தூண்டப்பட்ட வை நீண்டகாலம் நிலைத்து நிற்காது என்பதற்கு,தற்போது இலங்கையின் அரசியல் உலகுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.
கோட்டாபயவுக்கு எதிரான கோஷம் நாடெங்கும் மிகவும் ஆக்ரோசமாக ஒலிக்கின்றது. கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ‘கோட்டா கோ கம ‘என்ற பெயரில் போராட்ட களம் அமைத்து இளைஞர்களும் யுவதிகளும் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.
ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றும் மக்கள் எழுச்சியுடன் தொடர்ந்தும் முன்னெடுத்து பட்டு கொண்டே இருக்கிறது. கோட்டிட கோட்டா வுக்கு எதிரான கோஷம் விண்ணை பிளந்தாலும் அவர் அந்த இடத்திலிருந்து அசைவதாக இல்லை..
“பதவிக்காலம் முடியும் வரை பதவியில் இருப்பேன் ” என்று அவர் கூறுவது அவரது அடம்பிடிப்பை புடம் போட்டு காட்டுகிறது.
நாட்டில் உள்ள சுமார் 2 கோடி மக்களின் மூச்சும் ‘கோட்டா கோ ஹோம் என்றுதான் பேசுகிறது. “மக்கள் ஆணையைப் பெற்றுத்தான் ஜனாதிபதி ஆனேன் ” என்று கூசாமல் சொல்லும் கோட் டா , இந்த 2 கோடி மக்களின் ஒருமித்த கோஷங்களை ஏன் ஒரு ஆணையாக பார்க்காமல் இருக்கிறார்.
தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதே செய்து இருக்கிறேன் என்று அடித்துத்தான் கூறுகிறார்.ஆனால் நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு தானே காரணம் என்பதை இன்னும் அவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் இல்லை ;புரிந்து கொண்டதாகவும் இல்லை.
இன்னும் இவர் பற்றிச் சொல்லலாம் நேரம் தான் இடம் கொடுக்கவில்லை. நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடிக்கும் அழிவுகளுக்கும் காரணம் யார்??? இவர் அப்படி கூறினால் நாட்டில் ஏற்பட்டுள்ள மக்களின் அவலத்திற்கு பொறுப்பு யாராக இருக்கும் ?…
நாட்டுக்கு நன்மை செய்ததாக கூறும் ஜனாதிபதி இந்த சீரழிவுக்கும் பொறுப்பேற்க வேண்டும். உரம் தொடர்பாக எடுத்த திட்டம் வரவேற்கக் கூடியது. ஆனாலும் நடைமுறைப்படுத்துவதில் நாசம் விளைவித்து விட்டார்கள். அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தை நீக்கி 20 ஆவது திருத்தத்தை கொண்டு வந்து தனது அதிகாரத்தை வலுவாக்கி கொண்டவர் கோட்டாபய ராஜபக்ஷ.ஆகவே அனைத்துக்கும் இவர் தான் பொறுப்பு என்பது நிதர்சனம் ஆகியிருக்கிறது
ஆகவே,நிறைவேற்று அதிகாரம் கொண்ட இவர்,அனைத்துக்கும பொறுப்பு என்பது நிதர்சனம்.