மஹிந்தானந்த அளுத்கமகேயால் தாக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதி!

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் அவரது ஒருங்கிணைப்பு செயலாளரினால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு நபர் ஒருவர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி-வெடகெதெனிய பிரதேசத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து அவரும் அவரது மனைவியும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கலந்துகொள்வதற்காக சென்றுக்கொண்டிருந்த போதே, கணவருடன் கடைக்கு வந்து இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்காக தான் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாகவே இவ்வாறு தாக்கப்பட்டதாகவும் இதற்கு முன்னரும் அமைச்சரின் ஆதரவாளர்களால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் குறித்த நபர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தாம் அவ்வாறான தாக்குதலை மேற்கொள்ளவில்லை என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *