பதவி விலகுவதா? இல்லையா? இன்று மஹிந்த அறிவிப்பார்?
பிரதமர் பதவியை தொடர்வதா? இராஜினாமா செய்வதா? என்கிற இறுதி தீர்மானத்தை மஹிந்த ராஜபக்ஸ விரைவில் எடுப்பார் என்று தெரிய வருகின்றது.
பெரும்பாலும் இன்று திங்கட்கிழமை இறுதி தீர்மானத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்து கட்சிகளினதும் பங்கேற்புடன் இடை கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ இணங்கி உள்ளமையே இதற்கான பிரதான காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகின்றது.
இடை கால அரசாங்கத்துக்கு புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என்றும் இந்நிலைமை தற்போதைய பிரதமருக்கு பாரிய சவாலாக உண்மையிலேயே மாறி இருக்கின்றது என்றும் சுட்டி காட்டப்படுகின்றது.
