
ஜனாதிபதி அலுவலகத்திற்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகம பதாகைகளை அகற்றுவதற்கு பொலிஸ் அதிகாரிகள் முற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
பொலிஸாரின் முயற்சியால் கோபமடைந்த போராட்டக்காரர்கள், பொலிஸாரின் வாகனத்தை முற்றுகையிட்டு அவர்களை வெளியேறுமாறு தெரிவித்தனர்.
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயக போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் இன்றும் 24 ஆவது நாளாகவும் காலி முகத்திடலில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதேவேளை அலரிமளிகையினும் நாடளாவிய ரீதியிலும் தற்போது போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது,.