ஐ.நாவில் நல்லிணக்கப் பேச்சு இங்கு தமிழர் மீது அடக்குமுறை கஜேந்திரன் விசனம்!

ஐ.நாவில் நல்லிணக்கப் பேச்சு இங்கு தமிழர் மீது அடக்குமுறை
பிணையில் வந்த கஜேந்திரன் விசனம்!

நாட்­டின் ஜனா­தி­பதி ஐ.நா.வில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த போகின்­றோம் என்று கூறு­கி­றார். ஆனால் எங்­க­ளு­டைய உற­வி­னர்­களை, எங்­க­ளுக்­கா­கப் போரா­டி­ய­வர்­களை நினைவு கூரு­வ­தற்­கான உரி­மை­யைக்­கூட வழங்க அவர் தயா­ரில்லை என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செ.கஜேந்­தி­ரன் தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­விக்­கை­யில்,

தியா­க­தீ­பம் திலீ­ப­னின் நினை­வி­டத்­தில் சுட­ரேற்­று­வ­தற்கு நான் தயா­ரா­கும்­பொ­ழுது அங்­கு­நின்ற பொலி­ஸார் தடுத்­தார்­கள். நீதி­மன்­றத் தடை உத்­த­ரவு இருக்­கின்­றதா? என்று அவர்­க­ளி­டம் கேட்­டேன். ஆனால் அவர்­கள் நீதி­மன்ற தடை­யுத்­த­ர­வைக் காண்­பிக்­க­வில்லை. நீதி­மன்ற தடை­யுத்­த­ரவை நாங்­கள் மதிக்­கி­றோம்.
ஆனால், எங்­கள் உரி­மையை மீறும் உங்­க­ளது செயலை ஏற்­க­மு­டி­யா­தென்று தெரி­வித்­தேன்.

நினை­வி­டத்­துக்கு உள்ளே செல்ல அனு­ம­திக்­காத நிலை­யில், நினை­வி­டத்­துக்கு முன்­பாக நான் நின்ற இடத்­தி­லேயே சுட­ரேற்­றி­ய­போது அங்கு இருந்த பொலி­ஸார் மிலேச்­சத்­த­ன­மாக காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மாக எங்­க­ளு­டைய மக்­க­ளின் உணர்­வு­க­ளைப் புண்­ப­டுத்­தும் வித­மாக அதனை தட்டி அணைத்­தார்­கள். அதனை நான் வன்­மை­யா­கக் கண்­டிக்­கின்­றேன். நினை­வு­கூ­ரும் உரிமை எங்­கள் எல்­லோ­ருக்­கும் இருக்­கி­றது. சட்­டம் ஒழுங்­கைப் பாது­காப்­போம் என்ற போர்­வை­யில் தமி­ழர்­களை அடக்கி ஒடுக்கி சிங்­கள பௌத்த மேலாண்­மையை நிறுவ இங்­கி­ருந்து செயற்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள். எந்­த­வோர் இடத்­தி­லும் தமி­ழர்­க­ளு­டைய உணர்­வு­களை மதித்து செயற்­பட அவர்­கள் தயா­ராக இல்லை.

தனி ஒரு­வ­னாக நான் அந்த இடத்­துக்­குச் சென்­றால்­கூட சட்­டத்தை மீறி­னேன் என்று சித்­த­ரிக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால், சிறைச்­சா­லைக்­குள் சென்று கைத்­துப்­பாக்­கியை தலை­யில் வைத்து கொலை அச்­சு­றுத்­தல் விடுத்­த­வர் இது­வரை கைது­செய்­யப்­ப­ட­வில்லை. – என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *