வவுனியா சிதம்பரபுரம் நாகராசா வித்தியாலயத்தில் இருந்து முதன் முறையாக அனைத்து பாடங்களிலும் சிறப்பு சித்தியடைந்து மாணவிகள் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வெளியிடப்பட்டுள்ள சாதாரண தர பரீட்சை பெறுபெறுகளில் சிதம்பரபுரம் நாகாராசா வித்தியாலயத்தில் அனைத்து பாடங்களிலம் சிறப்பு சித்தி ஏ பெற்று மாணவியொருவர் சாதனை படைத்துள்ளதுடன் ஏனைய இரு மாணவர்கள் ஏழு பாடங்களில் சிறப்பு சித்திகளையும் பெற்றுள்ளனர்.
தனியார் வகுப்புகளுக்கு செல்லாத நிலையில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்ற தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் மற்றும் அவ் அமைப்பின் உறுப்பினர் சிவதிரு மாதவன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதேவேளை 7 பாடங்களில் சிறப்பு சித்திகளை பெற்ற தந்தையை இழந்த மாணவி யோகராசா கோகிலாவிற்கு உயர் வகுப்புக்கான கற்றல் உபகரணங்களை பெறுவதற்கான முதற்கட்ட உதவிளை வழங்கிய தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் குறித்த மாணவியின் தொடர் கல்வி செயற்பாட்டுக்கும் உதவுவதாகவும் தெரிவித்திருந்தார்.







