பொலிஸாரின் அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்! கஜேந்திரன் கைதுக்கு சரவணபவன் கண்டனம்!

பொலிஸாரின் அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்
கஜேந்திரன் கைதுக்கு சரவணபவன் கண்டனம்!

அகிம்சை வழி­யில் போராடி உயிர்­நீத்­த­வ­ருக்கு, அகிம்சை வழி­யில் அஞ்­சலி செலுத்த முயன்­ற­வர்­கள் மீது பொலி­ஸார் அதி­கார பலத்­தைப் பிர­யோ­கித்­துள்­ள­னர். பொலி­ஸா­ரின் இந்த நட­வ­டிக்கை கண்­டிக்­கத்­தக்­கது. இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட வேண்­டும்.
இவ்­வாறு தமிழ் அர­சுக் கட்­சி­யின் முக்­கி­யஸ்­த­ரும், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஈ.சர­வ­ண­ப­வன் தெரி­வித்­தார்.

நல்­லூ­ரில் தியாகி திலீ­பனை அஞ்­ச­லிக்க முயன்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செ.கஜேந்­தி­ரன் உட்­பட மூவர் யாழ்ப்­பா­ணம் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டமை தொடர்­பாக வெளி­யிட்­டுள்ள கண்­டன அறிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது-

தமிழ் மக்­க­ளுக்­காக அகிம்சை வழி­யில் போராடி உயிர்­நீத்த தியாகி திலீ­ப­னுக்கு, அமை­தி­யான முறை­யில் அஞ்­சலி செலுத்த முயன்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செ.கஜேந்­தி­ரன் உட்­பட மூவரை யாழ்ப்­பா­ணம் பொலி­ஸார் கைது செய்­துள்­ள­னர். நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரின் சிறப்­பு­ரி­மை­யைக் கேள்­விக்­கு­றி­யாக்­கும் வகை­யில், அதி­கார பலத்­தைப் பிர­யோ­கித்து, அவ­ரைக் குண்­டுக்­கட்­டாக தூக்கி வாக­னத்­தில் ஏற்­றிச் சென்­றுள்­ள­னர். அஞ்­ச­லிப்­ப­தற்­காக ஏற்­றப்­பட்ட சுடரை காலால் நசுக்கி அணைத்­துள்­ள­னர். இவை வன்­மை­யா­கக் கண்­டிக்­கப்­பட வேண்­டி­ய­வை­யா­கும்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச ஐக்­கிய நாடு­கள் சபை­யில் தமிழ் மக்­க­ளுக்கு நேசக் கரம் நீட்­டு­கி­றார். ஆனால் நாட்­டில் அர­சும், அதன் ஏவ­லா­ளர்­க­ளும் தமிழ் மக்­களை நசுக்­கும் செய­லி­லேயே ஈடு­ப­டு­கின்­ற­னர். தமிழ் மக்­க­ளின் அடிப்­படை உரி­மை­கள் கூட நாட்­டில் மறுக்­கப்­ப­டு­கின்­றது. அதன் ஒரு அங்­கமே நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரின் கைது நட­வ­டிக்கை.

குடா­நாட்­டில் வன்­மு­றை­கள், போதைப்­பொ­ருள் பாவனை என்பன தலை­வி­ரித்­தா­டும் நிலை­யில், அவற்­றை­யெல்­லாம் கண்­டும் காணாது இருக்­கும் பொலி­ஸார், தமிழ் மக்­கள் நினை­வேந்­தல்­களை மேற்­கொள்­ளும்­போது பாய்ந்து விழுந்து அவற்­றைத் தடுப்­ப­தற்கு என்­ன­வெல்­லாம் செய்ய முடி­யுமோ அவற்­றை­யெல்­லாம் செய்­வது வழ­மை­யா­கி­விட்­டது. தமிழ் மக்­க­ளின் நினை­வேந்­தல் உரி­மையை தடுப்­ப­தற்கு கொரோனா நிலை­மை­யைக் கையில் எடுக்­கும் பொலி­ஸார், மதுக்­க­டை­க­ளில் கூட்­டம் திர­ளும்­போது பாது­காப்­புக்கு நிற்­கின்­ற­னர்.

தமிழ் மக்­க­ளின் உரி­மை­க­ளைத் தடுப்­ப­தில் காட்­டும் அக்­க­றை­யைப் பொலி­ஸார், வன்­மு­றை­க­ளைத் தடுப்­ப­தி­லும், சட்­ட­வி­ரோத செயல்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் காட்ட வேண்­டும்.- என்­றுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *