
மின்னல் தாக்கி குடும்பஸ்தர் சாவு மற்றொருவர் காயம்!
யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார் என்று தெரிவிக்கப்பட்டது.
வெற்றிலைக் கேணி கோரியடி கடற்கரைப் பகுதி வாடியடி பகுதியில் கரைவலை தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இரண்டு மீனவர்களும் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகினர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த ஜோன்தொம்சன் குயின்ரன் சுதர்சன் (வயது – 38) என்பவரே உயிரிழந்தார்.
இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். சடலம் மருதங்கேணி ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.