வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உபதவிசாளருக்கு கொரோனா தொற்று இன்று (24) உறுதிப்படுத்தப்பட்டது.
தெற்குதமிழ் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் இடம்பெற்றது.
இதன்போது அமர்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த சபை உறுப்பினர்களுக்கு சுகாதார பிரிவினரால் அன்டியன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பரிசோதனையில் சபையின் உப தவிசாளருக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவரை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது.
ஏனைய உறுப்பினர்களுக்கு தொற்று பீடிக்காத நிலையில் அவர்களுடன் சபை அமர்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.