கட்டுக்கதைகளை விடுத்து பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுங்கள்! விசேட மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை!

கட்டுக்கதைகளை விடுத்து பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுங்கள்!                    விசேட மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை!

கட்­டுக்­க­தை­க­ளுக்கு இரை­யா­கா­மல், பிள்­ளை­க­ளுக்­குத் தடுப்­பூசி ஏற்­றும் விட­யத்­தில் பின்­வாங்­காது செயற்­ப­டுங்­கள் என்று பெற்­றோர்­கள் மற்­றும் பாது­கா­வ­லர்­க­ளி­டம், விசேட மருத்­துவ நிபு­ணர்­கள் கோரிக்கை விடுத்­த­னர். விசேட மருத்­துவ நிபு­ணர்­க­ளின் பரிந்­து­ரை­க­ளுக்­க­மை­யவே, உல­கி­லும் எமது நாட்­டி­லும், தடுப்­பூசி ஏற்­றல் வேலைத்­திட்­டங்­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அத­னால், தடுப்­பூசி ஏற்­றும் விட­யத்­தில் வீண் அச்­சங்­கொள்­ளத் தேவை­யில்லை என்­றும் அவர்­கள் சுட்­டிக்­காட்­டி­னர்.

ஜனா­தி­பதி ஊடக மையத்­தில் வீடியோ தொழில்­நுட்­பத்­தின் ஊடாக நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்ட ஊடக சந்­திப்­பில், சிறு­வர் நோயி­யல் விசேட மருத்­துவ நிபு­ணர்­கள் உள்­ளிட்ட குழு­வி­னர் கலந்­து­கொண்டு, சிறு­வர்­க­ளுக்­கான தடுப்­பூசி ஏற்­றல் தொடர்­பில் கருத்­து­ரைத்­த­னர். அதன்­போதே அவர்­கள் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­த­னர் என்று ஜனா­தி­பதி ஊட­கப் பிரிவு குறிப்­பிட்­டுள்­ளது. ஜனா­தி­பதி ஊட­கப்­பி­ரிவு விடுத்த செய்­திக் குறிப்­பில்,

எதிர்­வ­ரும் நாள்­க­ளில், நாட்­டின் அனைத்து மாகாண, மாவட்ட மற்­றும் ஆதார மருத்­து­வ­ம­னை­க­ளி­லும், சிறு­வர்­க­ளுக்­கான தடுப்­பூசி ஏற்­ற­லுக்­கு­ரிய திட்­ட­மி­டல்­கள், விசேட மருத்­துவ நிபு­ணர்­க­ளின் பரிந்­து­ரை­க­ளுக்­க­மைய மேற்­கொள்­ளப்­படவுள்­ளன. சிறு­வர்­க­ளுக்­கான தடுப்­பூசி ஏற்­ற­லா­னது, மூன்று படி­மு­றை­க­ளின் கீழ் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. அதன்­படி, 12 – 19 வய­துக்­கி­டைப்­பட்ட நாள்­பட்ட நோய்­க­ளு­டைய சிறு­வர்­க­ளுக்கு முதற்­கட்­டத் தடுப்­பூசி ஏற்­றல் இடம்­பெ­றும். 15 – 19 வய­துக்­கி­டைப்­பட்ட ஆரோக்­கி­ய­மான சிறு­வர்­க­ளுக்கு, அடுத்­த­கட்­ட­மா­கத் தடுப்­பூசி ஏற்­றப்­ப­டும்.

இந்­த­ந­ட­வ­டிக்கை, வெகு விரை­வில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அத்­து­டன், 12 – 15 வய­துக்­கி­டைப்­பட்ட சிறு­வர்­க­ளுக்­கான தடுப்­பூசி ஏற்­றல் வேலைத்­திட்­டம், மூன்­றா­வது படி­மு­றை­யாக, விசேட மருத்­துவ நிபு­ணர்­க­ளின் பரிந்­து­ரை­கள் கிடைக்­கப்­பெற்­ற­வு­டன் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. தடுப்­பூசி ஏற்­றப்­ப­டும் சிறு­வர்­கள் தொடர்­பில், விசேட மருத்­து­வக் குழு­வொன்­றால் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு, சிறு­வர்­க­ளுக்கு ஏற்­ப­டும் சிக்­கல்­கள் தொடர்­பில் அவ­தா­னிக்­கப்­ப­டும். வீடு­க­ளுக்­குச் சென்ற பின்­னர் ஏதே­னும் சிக்­கல்­கள் ஏற்­ப­டு­மா­யின், அதற்­கான ஆலோ­ச­னை­க­ளைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக, தொலை­பேசி இலக்­க­மொன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டும் என்று விசேட மருத்­துவ நிபு­ணர் அநு­ருத்த பாதெ­னிய தெரி­வித்­தார்.

தடுப்­பூசி ஏற்­றல் வேலைத்­திட்­டத்தை, மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குள் மாத்­தி­ரம் முன்­னெ­டுக்­க­வும் ஃபைஸர் தடுப்­பூ­சியை மாத்­தி­ரம் சிறு­வர்­க­ளுக்கு ஏற்­ற­வும், விசேட மருத்­துவ நிபு­ணர்­கள் குழு பரிந்­துரை செய்­துள்­ளது. வைரஸை விட வேக­மாக, கட்­டுக்­க­தை­கள் பர­வு­கின்­றன. அவ்­வா­றான கட்­டுக்­க­தை­கள், பெரும் விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும். சிறு­வர்­க­ளுக்­கான தடுப்­பூசி ஏற்­றல் என்­பது, எமது சமூ­கத்­தில் மிக­வும் உணர்ச்­சி­ம­யப்­பட்ட விட­யம், அத­னால், மருத்­து­வர்­க­ளைப் போன்றே ஊட­கங்­க­ளும், மிக­வும் பொறுப்­பு­ணர்­வு­டன் நடந்­து­கொள்ள வேண்­டு­மென்று சுட்­டிக்­காட்­டி­னார்.

இணை­ய­வ­ழிக் கல்­வி­யின் ஊடாக, சிறு­வர்­க­ளின் வெளித்­தி­றன் அபி­வி­ருத்­திக்­குப் பெரும் பாதிப்பு ஏற்­ப­டு­கின்­றது எனச் சுட்­டிக்­காட்­டிய சிறு­வர் நோயி­யல் தொடர்­பான விசேட மருத்­துவ நிபு­ணர் பேரா­சி­ரி­யர் பூஜித்த விக்­கி­ர­ம­சிங்க, பாட­சா­லைக் கல்வி நட­வ­டிக்­கை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டா­லும், அறி­வாற்­றல் குறைந்த பிள்­ளை­க­ளைப் பாட­சா­லை­க­ளுக்கு அனுப்­பு­வது குறித்து பெற்­றோர் அச்­சம் கொண்­டுள்­ள­னர். இத­னால், கல்­வி­யைப் பெறு­வ­தற்கு உள்ள சம உரிமை, அந்­தச்­சி­று­வர்­க­ளுக்­குக் கிடைக்­கா­மல் போகும். அவ்­வா­றான நிலை­மையை, தடுப்­பூசி ஏற்­ற­லின் ஊடா­கத் தவிர்த்­துக்­கொள்ள முடி­யு­மென்­றும் கூறி­னார். – என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *