‘யாழில் துயரம்’தீ விபத்தில் சிக்கி மாணவி உயிரிழப்பு!

வீட்டு சுவாமி அறையில் விளக்கேற்றிய போது பெற்றோல் கலன் தீப்பற்றி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பகுதியில் இத்துயரச் சம்பவம் இன்று (02) திங்கட் கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

மகாஜனா கல்லூரி மாணவியான பண்டத்தரிப்பை சேர்ந்த சுதர்சன் – சுதர்சிகா (வயது-17) என்ற மாணவியே இச்சம்பவத்தில் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சுவாமி அறையில் விளக்கேற்றிவிட்டு தீக்குச்சியை கீழே போட்டுள்ளார்.
சுவாமி தட்டுக்கு கீழாக வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கலனில் தீக்குச்சி பட்டதும் தீப்பற்றி எரிந்தே இவ் அநர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *