மதுப் பிரியர்களுக்கு சோகமான செய்தி!

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினை காரணமாக நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருள்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன.

இவ்வாறான நிலையில் தற்போது மதுபானங்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்தல் ஒன்றின் (ஒரு கேன்) விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மதுபான நிறுவனம் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் தற்போது போக்குவரத்து மற்றும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்து வருவதால், மதுபானம் மற்றும் பீர் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *