கெரவலபிட்டிய யுகதனவ் மின் நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவது குறித்து அரசாங்க கட்சித் தலைவர்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான விவாதம் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை வந்தவுடன் இது குறித்து மேலும் கலந்துரையாடவுள்ளதாக விவாதத்தின் முடிவில் ஊடகங்களிடம் கூட்டணி கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, மின் நிலையத்தை அமெரிக்கா நிறுவனத்திற்கு வழங்குவது சிக்கல் நிறைந்தது என ஏனைய அரசு கட்சிகள் விவாதத்தின் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளன.
ஆனால் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட குழு இந்த முதலீடு இலங்கைக்கு சுமார் 250 மில்லியன் டொலர்களைக் கொண்டுவரும் எனவும் அது ஒரு இலாபகரமான முதலீடு என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், குறித்த கலந்துரையாடலின் போது பிரதமர் நடுநிலையை கடைபிடித்ததாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதேவேளை, சம்பந்தப்பட்ட அமைச்சரவை முன்மொழிவை முன்வைத்த நிதி அமைச்சர் உள்ளிட்ட குழு ஒரு கருத்தையும், ஏனைய கட்சித் தலைவர்கள் பிறிதொரு கருத்தையும் கொண்டிருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் கையெழுத்திடபட்ட கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க போவதாகவும் இதனை எதிர்க்கும் குழு தெரிவித்துள்ளது
இந்த மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திடம் கொடுப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவினை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.