பாடசாலைகளை மீண்டும் நான்கு கட்டங்களாக திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
அதன்படி, முதலில் 1-5 வரையான மாண்வர்களுக்கான வகுப்பை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.