இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கடல் எல்லையில் இந்திய கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் இந்திய எல்லைப் பகுதியில் படகு ஒன்று நிறுத்தபட்டிருப்பதைக் கண்டு படகில் வந்த 6 பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என்பதும் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர்கள் 6 பேரையும் இந்திய கடற்படையினர் கைது செய்து காரைக்கால் துறைமுகத்திற்கு நேற்று மதியம் அழைத்து வந்துள்ளனர்.
தொடர்ந்தும் அவர்களிடம் கடலோர காவல் குழும ஆய்வாளர் ராஜா தலைமையில் பொலிஸார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து மதுஷா, அமிலா மசங்கா, சுஜித் பண்டாரா, புதிகா, உஷன் மதுசன், துங்கா மகேலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த நாகை கடலோர காவல் குழும பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



