உள்நாட்டு தொழிநுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பீரங்கி பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக அறிவிப்பு!

நீண்ட தூர இலக்கை அழிக்கும் மேம்படுத்தப்பட்ட உயர் ரக ஏடிஏஜிஎஸ் பீரங்கி பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பீரங்கியில் இருந்து சென்ற குண்டுகள் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததுடன், சுவீடன் தயாரிப்பான Bofors பீரங்கிகளுக்கு பதிலாக இது பயன்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உள்நாட்டு தொழிநுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட பீரங்கியை தயாரித்து உள்ளது.

டாடா மற்றும் பாரத் போர்ஜ் நிறுவனங்களின் உதவியுடன் இந்த பீரங்கி தயாரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *