மஹிந்த பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்? – நாடாளுமன்றத்தில் நாளை முக்கிய அறிவிப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி நாளையதினம் (புதன்கிழமை) அவர் நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் பதவி விலகினால் அமைச்சரவையும் கலைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாளையதினம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *