இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா?- சுற்றாடல்துறை அமைச்சு

இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் எதிர்காலத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென சுற்றாடல்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றாடல்துறை அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட செயலமர்வின்போது, இந்த விடயத்துடன் தொடர்புடைய பேராசியர்கள் மற்றும் கலாநிதிகள் இதனை தெரிவித்ததாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இலங்கையில் இதுவரை பதிவான நிலஅதிர்வுகளில் 98 வீதமானவை புவியியல் எல்லைப் பகுதிகளில் உணரப்பட்டுள்ளன.

மேலும், அதற்கு வெளியே 2 வீதமான நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. ஆகவே பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுற்றாடல்துறை அமைச்சு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *