துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுங்கத்திணைக்கள பணிப்பாளர் மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இன்று இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சுமார் 800 கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாதுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, பருப்பு, வெள்ளைப்பூடு, ரின்மீன், பால் வகைகள், இஞ்சி, பெருஞ்சீரகம் ஆகிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களே இவ்வாறு விடுவிக்கப்படாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.